திருப்புகலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

84பார்த்தது
திருப்புகலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் திருக்கண்ணபுரம் காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, வாகனம் ஓட்டும் போது கைபேசி உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும், பேருந்தில் படியில் பயணம் செய்வதை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணதாசன், விஜயகுமாரி, தலைமை காவலர்கள் நீலகண்டன், கேசவராஜ், ஊராட்சி செயலர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி