நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம்; கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் இடர்பாடுகளை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு;
கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04365-1077 என்ற மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-233-4233 மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் இக்கட்டப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
எனவே பொது மக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.