திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தலைமையில் கண்டன பேரணி

61பார்த்தது
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு அமைதி காக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் மொட்டை அடித்து தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை கடற்படை அதிகாரிகளை கண்டித்தும் திராவிட கழகம் சார்பாக நாகையில் பேரணி நடைபெற்றது. நாகை பழைய பேருந்து நிலையத்தில் திராவிடக் கழக தலைவர் கீ. வீரமணி தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணி ஐந்து கிலோ மீட்டரை தொடர்ந்து நாகை அவுரி திடலை வந்தடைந்தது. பின்னர் தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக அமைதி காக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் மீனவர்களின் கைது நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் தமிழக மீனவர்கள் மொட்டை அடித்து அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்தும் தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி