மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

83பார்த்தது
அம்பேத்கர், காந்தி வேடமணிந்து மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் தனியார் அமைப்பு மூலம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது பிரச்சாரத்தில் மகாத்மா காந்தி வேடமணிந்தும் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வேடம் அணிந்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 28ஆம் தேதி சென்னை ஆவடியில் தொடங்கிய விழிப்புணர்வு இயக்கம் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பிரச்சாரத்தை ஈடுபட்டுள்ள நிலையில் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில். மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் ரீதியான பாதிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களிலும் மது எதிரான பிரச்சாரங்கள் நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி