நாகப்பட்டினம் நாணயக்கார அழகர் மேலமடவிளாகத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த உச்சமா காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழாவின் இரண்டாம் நாளை முன்னிட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கொலுவில் வினாயகர், சரஸ்வதி, லெட்சுமி, கிருஷ்ணன், தசாவதாரம், பொண்ணு, மாப்பிள்ளை, கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட பலவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலுபொம்மைகள் இடம் பெற்றிருந்தன அம்மனுக்கு பால், பன்னீர் , சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கொலு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.