விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

85பார்த்தது
நாகை , திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2023 - 24 ல் காவிரி நீர் சரிவர கிடைக்கப் பெறாததால் சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவம் தப்பபி பெய்த கன மழையால் நெல் மணிகள் சேதமடைந்தது பாதிக்கப்பட்ட சம்பா நெற் பயிர்களை உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தனியார் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்கியோ என்ற தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு 80 சதவீதமும் , மத்திய அரசு 20 சதவீதமும் செலுத்தி காப்பீட்டு தொகையை வழங்க வைக்கிறது. இந்த நிலையில் தனியார் காப்பீட்டு நிறுவனம் மத்திய , மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சை அதிகாரமாக காப்பீட்டு திட்டத்தில் பயிர் பாதிப்பை குறைத்து மதிப்பிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 2023 - 24 ஆண்டிற்கான சம்பா பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பை குறைத்து வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து முழு இழப்கீடு வழங்க கோரி புத்தூர் ரவுண்டாணவில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி