Sep 14, 2024, 03:09 IST/கீழ்வேளூர்
கீழ்வேளூர்
இருச்சக்கர வாகனம் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி;
Sep 14, 2024, 03:09 IST
*நாகை அருகே இருச்சக்கர வாகனம் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி; வாகனத்தில் வந்த இளைஞர்கள் சாலையில் பறந்து பெல்டி அடித்து விழும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது*
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், தேவூர் சாலையில் இலுப்பூர் சத்திரம் அருகே தேவூர் வ. ஊ. சி தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன், இளவரசன் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள இரும்பு கடைக்கு சென்று பொருள் வாங்குவதற்காக திரும்பியுள்ளனர். அப்போது அவ்வழியாக முத்துப்பேட்டை மதுக்கூரைச் சேர்ந்த இளைஞரின் இருச்சக்கர வாகனம் இவர்களின் மீது வேகமாக மோதியது. இதில் இளவரசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இளவரசன் , தமிழ்செல்வன் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இரண்டு இருச்சக்கர வாகங்கள் மோதி கொள்ளும் காட்சி அங்குள்ள இரும்பு கடையில் உள்ள சிசிடிவில் பதிவாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் ஒன்றுக்கொன்று வேகமாக மோதியதில் வாகனத்தில் இருந்து பறந்து பல்டி அடித்து சாலையில் விழும் பதைபதைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.