நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தென்னடார், தகட்டூர், வாய்மேடு உள்ளிட்ட இறவை பாசன விவசாயிகள் வரும் இரண்டாம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து நேற்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திலகா தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து உடனடியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.