நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
நாகை, திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை படிப்படியாக கன மழையாக மாறி சிறிது நேரம் பெய்தது.
நாகை, நாகூா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழ்வேளூா், கீழையூா், மேலப்பிடாகை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகளும், கடந்த சில நாள்களாக நிலவிய கடும் வெப்ப குறைந்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா். எனினும் மழையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.