நாகப்பட்டினம் - Nagapattinam

நாகை அவுரி திடலில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு; ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் புகைப்பட பதாகைகளை கையில் தாங்கியபடி நாகை அவுரி திடலில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் அமித்ஷா பேச்சை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அம்பேத்கர் உருவம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஒன்றிய அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்