நாகை மக்களவைத் தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வை. செல்வராஜ் எம். பி, திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக காலை 9 மணிக்கு பனங்குடி ஊராட்சியில் தொடங்கி அகரக்கொந்தகை க கொத்தமங்கலம், ஆலத்தூர், சேஷமூலை, இடையாத்தங்குடி, ஏர்வாடி, அம்பல், கொங்கராயநல்லூர், புத்தகரம், கட்டுமாவடி உள்ளிட்ட 21 ஊராட்சி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், திருமருகல் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஜமுனா செந்தில்குமார், கார்த்திகேயன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.