துணைத்தலைவர் மீது திமுகவினரே நம்பிக்கையில்லா தீர்மானம்

54பார்த்தது
நாகப்பட்டினம் நகராட்சி 36 நகர்மன்ற உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினரும் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்கள். திடீரென எழுந்து பேசிய நாகூர் 6 ஆவது வார்டு திமுக உறுப்பினர் வனிதா திமுக நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் மீது பொது அவையில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது தன்னுடைய வார்டின் நலன்சார்ந்த பணியை நகர்மன்ற துணைத் தலைவரும் நாகூர் நகர திமுக செயலாளருமான செந்தில் தடுப்பதாகவும், தன்னுடைய எல்லைப் பகுதியில் வந்த நியாய விலை கடையை வேறு இடத்திற்கு மாற்றியதாகவும், தொடர்ந்து பெண் கவுன்சிலர்கள் அவமரியாதை செய்யப்படுவதாகவும் எனவே அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ஆவேசத்துடன் பேசினார். அப்போது நகர்மன்ற துணைத்தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில்திமுக கவுன்சிலர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதேபோல 1 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திவ்யா, 6 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதுர்நிஷா, உள்ளிட்ட 3 பெண் கவுன்சிலர்கள் நாகை நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி