இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிராகன்’. இப்படத்தில் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் புதிதாக இணைந்துள்ளனர். இதில், மிஸ்கின் வில்லனாகவும், கௌதம் போலீசாகவும், கே.எஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, விஜே சித்து, அர்ஷத் கான் இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.