பிக் பாஸ்-ல் பேசிய சவுந்தர்யா, ஒரு போன் கால் மூலம் தான் ரூ.17 லட்சத்தை இழந்ததாக கூறியிருந்தார். இதுகுறித்து பதிவான முதல் தகவல் அறிக்கையை சவுந்தர்யா குடும்பத்தார் பகிர்ந்தனர். அதில், கடந்த ஆக.27ஆம் தேதி சவுந்தர்யாவை தொடர்புகொண்ட மோசடி கும்பல், சிபிஐ அதிகாரி போன்று பேசி, சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி, சவுந்தர்யாவிடம் இருந்த பணத்தை கேட்டுள்ளனர். இது உண்மை இல்லை என்றால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் பணம் அனுப்பி ஏமாந்துள்ளார்.