நெல்லையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெங்கடேஷ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் மீது வரி ஏய்பு உள்ளிட்ட புகார்கள் வந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 தினங்களாக வெங்கடேஷ் வீடு
உள்பட 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இன்று 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளால் விசாரணை மற்றும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் 4 நாட்களாக நடந்த சோதனை இன்று மாலையுடன் முடிவுபெற்றது.