இந்தியாவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் தங்களது மேற்படிப்பிற்காக கனடா செல்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் SDS என்ற திட்டத்தை கனடா அரசு திடீரென ரத்து செய்தது. அந்நாட்டில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள், இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும் என கூறப்படுகிறது.