உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலோரா கிராமத்தை சேர்ந்த ஹிமான்ஷி (27) என்ற அந்த பெண் தனது மாமா மற்றும் அவரது மகன்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். காரில் சடலத்தை ஏற்றிச்செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், ஹிமான்ஷியிடம் அவரது மாமா பணம் கேட்டபோது இல்லையென கூறியதால் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.