கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும் என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரவிச்சந்திரன், "வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. மரைன் ஹீட் வேவ் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்" என்று தெரிவித்துள்ளார்.