சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழிசை சௌந்தரராஜனிடம் அமைச்சர் சேகர் பாபு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தமிழிசை, “அண்ணன் சேகர் பாபு தான் டென்ஷன் ஆகிறார். இல்லையெனில் குளத்தில் இருக்கும் அல்லியை பார்த்த உடனே அவருக்கு தாமரையாக தெரிகிறது. அதைப் பார்த்து டென்ஷன் ஆகிறார். அவர் எங்களை வாஷ்-அவுட் பண்ணிடுவதாக சொல்லுகிறார். ஆனால், நாங்கள் அவரை ஸ்மாஷ்-அவுட் பண்ணிடுவோம்” என்றார்.