இந்திய கிரிக்கெட் விராட் கோலி கிரிக்கெட்டை தாண்டி தொடர்ந்து தன்னுடைய மனைவி, குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது மனைவி அனுஷ்காவுடன் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி கலந்துகொண்டார். அங்கு இருந்த அவரது தீவிர ரசிகையான பெண் ஒருவர், விராட் கோலியின் கையை இழுத்துப் பிடித்து செல்ஃபி கேட்டிருக்கிறார். உடனே விராட்டும் அந்த பெண்ணிற்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.