மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிகாரிகளிடம், "மழை பெய்யத்தான் செய்யும், அதற்காக தார்பாய் போட்டு மூடிவிடலாமா.?" என கடிந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “20 நாட்களாக இங்கு சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல தற்போது இங்கு தொற்று நோய் பரவ தொடங்கியுள்ளது. அதிகாரிகள் எல்லாம் அசால்டாக இருக்கிறார்கள். கேட்டால் பணம் இல்லை என கூறுகிறார்கள்” என காட்டம் தெரிவித்தார்.