குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் போலாரா என்பவர், தான் 12 ஆண்டுகளாக பயன்படுத்திய காருக்கு இறுதிச்சடங்குகள் செய்து அதை மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த கார் வாங்கிய பின் எனது தொழிலும், குடும்பமும் முன்னேற்றம் அடைந்தது. எனவே அதை விற்க மனமில்லாமல் அதற்கு இறுதி மரியாதை செய்ய நினைத்து காரை எனது விவசாய நிலத்தில் புதைக்கிறேன் என போலாரா கூறினார். சுமார் ரூ.4 லட்சம் செலவில் நடந்த இந்த இறுதிச்சடங்கில் 1,500 பேர் பங்கேற்றனர்.