பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டிலை வென்ற 26 வயதான முத்துக்குமரன் சிவகங்கையை சேர்ந்தவர். பேச்சாளரான இவர், தனியார் ஊடகங்களில் VJ ஆக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற இவருக்கு ரூ.40.5 லட்சம் பரிசு தொகை மற்றும் பணப்பெட்டியில் இருந்த ரூ.50,000 கிடைக்கும். இது தவிர ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் என 105 நாட்களுக்கு ரூ.10.5 லட்சம் சம்பளம் கிடைக்குமென கூறப்படுகிறது.