நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்

58பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொழுமடை என்ற கிராமத்தில் ஏராளமான கால்நடை விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கொழுமடை கிராமத்தில் பொதுமக்கள் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து மாட்டுத் தொழுகையில் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். முன்னதாக மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு தீபாராதனை காண்பித்து வணங்கினர்.

தொடர்புடைய செய்தி