2025 புத்தாண்டை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் போலீசார் நேற்று இரவு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வைத்து மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் போலீசார் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.