தெலங்கானா மாநிலம் காமரெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் இளம் பெண் ஒருவர் நிர்வாண வீடியோ கால் செய்துள்ளார். அதனை எடுத்த அந்த இளைஞரும் உற்சாகமாக பேசியுள்ளார். அந்த அழைப்பு முடிந்த சிறிது நேரத்தில் அப்பெண் மீண்டும் கால் செய்து பணம் கேட்டுள்ளார். இல்லையென்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர் ரூ.60 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யவே போலீசில் புகார் அளித்துள்ளார்.