ராஜபாளையத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்ற நிலையில் நெல்லை பாபநாசம் அருகே உள்ள பாரதி அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. முதல் பரிசை வென்ற பாரதிய அணிக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முதல் பரிசை 8000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வழங்கினர்.