நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த ராகவ்கபில் என்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் செஸ் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இந்நிலையில் பரிசு கோப்பையுடன் ராகவ்கபில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.