மேலப்பாளையத்தில் நடைபெற்ற உங்கள் நண்பன் பல்சுவை மாத இதழ் வெள்ளி விழா நிகழ்வில் பல்வேறு சாதனைகள் புரிந்த மற்றும் சமூக நல ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மற்றும் பசுமை மேலப்பாளையம் அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது. தாமிரபரணி நதி பாதுகாப்பிற்காக தொடர்ந்து உழைத்து வரும் பொருணை காஜா மைதீனுக்கும் விருது வழங்கப்பட்டது.