நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பட்டங்காடு கிராமத்தில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கு பலூன் ஊதும் போட்டி நடத்தப்பட்டது. அதேபோல் ஆண்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.