தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பொடிச்சன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்துஜா (19). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரை கல்லூரிக்கு செல்லுமாறு அவரது பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிந்துஜா வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.