நெல்லை மாவட்டம் சென்னை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு வள்ளியூர் அருகே சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதற்காக சாலை ஓரம் நின்ற மரங்கள் வேரோடு புடுங்கப்பட்டு மீண்டும் நடப்பட்டன. மீண்டும் மரங்கள் தளிர் விடும் வகையில் இந்த முயற்சி மேற்கொண்டனர். அதன் பலனாக சமீபத்தில் பெய்த மழையால் தற்போது பெரும்பாலான மரங்கள் தளிர் விட்டுள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.