நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள கவின் கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு ஓவியம் உள்பட பல்வேறு கலைநயமான பயிற்சி வழங்கப்படுகிறது. இன்று கவின் கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சிறந்த ஓவியத்தை தேர்ந்தெடுப்பதற்கான சவால் (போட்டி) நடைபெற்றது. இதில் மாணவர்கள் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிறந்த ஓவியம் வரைந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.