வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை பணம் திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் வீடு ஒன்றில் புகுந்து பீரோவை உடைத்து நகை பணம் திருடியவர்களை தாலுகா போலீஸார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டுக்ருப்பூர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன் மகன் சரவணன்(24), இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வீட்டில் இவரது தாயார் மட்டும் இருந்து வருகிறார். கடந்த செப். 25 இல் இவரது தாயார் வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப வரும்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2 சவரன் தங்க சங்கிலி, பிரேஸ்லெட் 1, மோதிரம், தோடு என மொத்தம் 5 சவரன் தங்க நகைகள், ரொக்க பணம் 30 ஆயிரம் திருடு போயிருந்தது. இது பற்றி மகன் சரவணனுக்கு தகவல் தெரிவிக்க அவர் கும்பகோணம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து, கைரேகை தடயங்கலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார். திருட்டுப்போனவை மதிப்பு மொத்தம் ரூ 1 லட்சத்து 5 ஆயிரம் என்று சொல்லப்பட்டது.