கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

60பார்த்தது
கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
தாராசுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை அப்பகுதிவாசிகள் முற்றுகையிட்டனர்.

கும்பகோணம் மாநகராட்சி 35 ஆவது வார்டு தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அப்பகுதி வாசிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் கழிவுநீரை கடத்த அந்த பகுதி மக்கள் தங்களது சொந்த செலவில் குழாய் அமைத்து அதற்கு அனுமதி தருமாறு வேண்டினர். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வார்டு உறுப்பினர் பத்ம. குமரேசன் (அதிமுக) தலைமையில் 19 ஆவது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி (அதிமுக) உள்ளிட்ட 20 க்கும் மேலானவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். ஆணையாளர் மற்றும் உதவி செயற் பொறியாளர் மன்ற கூட்ட அரங்கில் இருந்ததால் அங்கு சென்றனர். அங்கு துணை மேயர் மற்றும் ஆணையர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரிடம் மனு கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி