தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் புதிய அரசு மதுபானகடை திறக்க கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை பெண்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கும்பகோணம் அருகே தாராசுரம் அண்ணா காய்கனி தினசரி சந்தை அருகே உள்ள மள்ளுசெட்டி வீ தியில் புதியதாக அரசு மதுபான கடை திறக்கப்போவதாக அப்பகுதி பெண்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் மதியம் அந்த கடை முன்பு அமர்ந்து திறக்க கூடாது என்று கோஷமிட்டனர். தகவல் கிடைத்ததும் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் வந்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களிடம் தற்காலிகமாக கடை திறக்கப்படாது, பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்றதும் பெண்கள் கலைந்து சென்றனர்.