கும்பகோணத்தில் பிரியாணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

81பார்த்தது
கும்பகோணம் மடத்து தெருவில் தினமும் காலை முதல் இரவு வரை பொதுமக்களின் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும். இந்த தெருவில் சூப்பர் மார்க்கெட், சாலையோர தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளது. இந்நிலையில் மேலக்காவிரி பகுதியை சேர்ந்த ஹாஜா என்பவரின் பிரியாணி கடையில் இரவு 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென கடை முழுவதும் பரவியது. இதனிடையே பிரியாணி கடையில் இருந்த சிலிண்டரும் வெடித்ததால் கடையின் முதல் தளமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் நாலப்பக்கமும் சிதறி ஓடிவிட்டனர். தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மடத்து தெருவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க இருபுறமும் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பலத்த பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், கும்பகோண துணை மேயர் தமிழழகன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி