பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

79பார்த்தது
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தேனபிஷேக பெருமான், பிரளயம் காத்த பெருமான் என பெயா் கொண்டுள்ள தேனபிஷேக விநாயகா் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறாா். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல் பொருள்களான மேனியை கொண்டவராக இவா் எழுந்தருளியுள்ளாா். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு விநாயகா் சதுா்த்தி நாளில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நாள்களில் கிடையாது. விநாயகா் சதுா்த்தி திருநாளில் மட்டும் தேன் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் கண்கூடாக நிகழ்கிறது. 40வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனபிஷேக விழா மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கி மறுநாள் 8ம் தேதி அதிகாலை 4: 30 மணிவரை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி