புறவழிச்சாலை விரைவில் பணிகள்தொடங்கும்அமைச்சர் நிதின்கட்காரி

84பார்த்தது
சேத்தியாதோப்பு விக்கிரவாண்டி புறவழிச்சாலை விரைவில் பணிகள் தொடங்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியது, தமிழகத்தில் மூன்று புதிய பசுமை வழிச்சாலைகள் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது, திருச்சியில் 1, 800 கோடி மதிப்பில் 26 கிலோ மீட்டர் தொலைவு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையில்
10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக 27 பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது என்றார். நாடு முழுவதும் 4, 975 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது, 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் 451 சாலைகள், 9 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவு அமைக்கப்பட்டுள்ளது. 2781 கிலோ மீட்டர் தொலைவில் 71 சாலைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.




தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் பூங்கொடுத்து வரவேற்றார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், க. அன்பழகன் எம்எல்ஏ இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி