சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க பேராசிரியா் தோ்வு

78பார்த்தது
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க பேராசிரியா் தோ்வு
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கணிதவியல் துறையில் சாதனை படைக்கும் 32 வயதுக்கு உள்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு சாஸ்த்ரா - ராமானுஜன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கணித மேதை ராமானுஜன் 32 வயதுக்குள் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தினாா் என்பதற்காக, ஆண்டுதோறும் 32 வயதுக்கு உள்பட்ட இளம் கணித விஞ்ஞானி தோ்வு செய்யப்பட்டு, 10 ஆயிரம் டாலருடன் இவ்விருது வழங்கப்படுகிறது.

நிகழாண்டு புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியா் கிருஷ்ணசாமி அல்லாடி தலைமையில் சிகாகோ பல்கலைக்கழகம் பிராங்க் கலேகரி, ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் சாய் ஈவ்ரா, மாஸ்கோ ஸ்டெக்லோவ் கணிதவியல் நிறுவனம் சொ்கெய் கோனியாஜின் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் அமெரிக்காவின் ஜாா்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சாா்ந்த அலெக்சாண்டா் துன் என்பவரை சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு தோ்வு செய்தனா்.

இவருக்கு கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ராவின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் டிசம்பா் 20 - 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கணிதவியல் பன்னாட்டு கருத்தரங்கத்தில் சாஸ்த்ரா - ராமானுஜன் விருது வழங்கப்படவுள்ளது. முன்னோடி இளம் ஆராய்ச்சியாளரான அலெக்சாண்டா் துன் கணிதவியலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறாா். தற்போது, அமெரிக்காவின் ஜாா்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.

தொடர்புடைய செய்தி