மகாமக பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

69பார்த்தது
கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருகின்ற 2028ஆம் ஆண்டு நடைபெற இருக்கும், மகாமகப் பெருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள்குறித்த ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சு. கல்யாணசுந்தரம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மகாமகம் பெருவிழாவிற்கு துறை ரீதியான மேற்கொள்ள வேண்டிய வசதிகள், திட்டங்கள், மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி, உத்தேச திட்ட மதிப்பீட்டையும் தெரிவித்தனர்.

கூட்டத்தில், உதவி மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ், வருவாய் கோட்டாட்சியர் செ. பூர்ணிமா, கும்பகோணம் மாநகராட்சி மேயர் க. சரவணன் துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப. தமிழழகன் மாநகராட்சி ஆணையர் இரா. லெட்சுமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா. சிவக்குமார் ம. ஆனந்தராஜ் பலர் கலந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி