5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து

73பார்த்தது
5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து
மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, அசாமி, பாலி மற்றும் பிரக்ரித் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஒடியா உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி