கும்பகோணம்: அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்

83பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கடந்த சில நாட்களாக காரசார அறிக்கைகளும், பேட்டிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவொளி தலைமையில்  நேற்று(ஆக.26) எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தகவல் தொழில்நுட்ப மண்டல இணைச் செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப மண்டல துணைச் செயலாளர் பாலாஜி முன்னாள் ஒன்றிய குழு  உறுப்பினர் வீரமார்த்தாண்டன்உள்ளிட்ட ஏராளமான தகவல் தொழில் நுட்ப பிரிவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி