
சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தும் உள்ளே செல்லாத ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் (டிச. 09 & 10) சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்திற்குள் வந்தும் போடி தொகுதி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்குள் செல்லவில்லை. அவரின் இருக்கை சட்டமன்றத்தில் பின் வரிசைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிருப்தி காரணமாக விவாதத்தில் பங்கேற்கவில்லை.