மும்பையில் உள்ள ஜோகேஸ்வரியில் நேற்று (டிச.9) மதியம் 1:30 மணியளவில், சர்வீஸ் சென்டரைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் பணிமனைக்கு பிஎம்டபிள்யூ காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, திடீரென காரின் முன்பக்கம் இருந்து புகை கிளம்பியுள்ளது. உடனே நடுரோட்டில் காரை நிறுத்திய ஓட்டுநர், அங்கிருந்து தப்பினார். சிறிது நேரத்தில் காரில் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.