சென்னை தாம்பரம் அருகே நேற்று (டிச.9) இரவு ராமஜெயம் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு இருவர் சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள், தோசை தடியாக போட்டுத்தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, ஹோட்டல் ஓனர் ராமஜெயத்திற்கும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ராமஜெயத்தை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.