தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், "விஜய் கண்டிப்பா ஜெயிப்பார். அவரின் அரசியல் நகர்வு நல்லா இருக்கிறது" என்றார். அதைத் தொடர்ந்து விஜய் விசிகவுடன் கூட்டணி வைப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, "நான் இங்கு வந்திருக்கும் நோக்கம் வேறு" என மௌனமாக பதிலளிக்காமல் கடந்து சென்றார்.