பழனியில் அதிகரித்த பஞ்சாமிர்தம் விற்பனை.. ஏன் தெரியுமா?

78பார்த்தது
பழனியில் அதிகரித்த பஞ்சாமிர்தம் விற்பனை.. ஏன் தெரியுமா?
பழனி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பஞ்சாமிர்தம் தான். பஞ்சாமிர்தம் விற்பனை 2023 ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை 5 மாதங்களில் ரூ.11,49,87,540 ஆக இருந்தது. இந்த ஆண்டு (2024) ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை 5 மாதத்தில் ரூ.15,86,19,125 ஆக உயர்ந்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலரும் பழனியில் தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி செல்வதால் ஐந்து மாதத்தில் விற்பனை அமோகமாக இருந்ததாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

நன்றி: Puthiya Thalaimurai
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி