தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (டிச.09) | காணாமல் போன சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் சிறுவன் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் மர்ம இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.