ஆந்திர மாநிலம் நந்திகொட்கூர் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (21) என்ற இளைஞர் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்தார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் மகளை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று (டிச. 08) இரவு சென்ற ராகவேந்திரா மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்த நிலையில் காயமடைந்த ராகவேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.